October 28, 2016

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது!!


விற்பனை விளிம்பு (டீலர் மார்ஜின்) தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து, நேற்றும் விற்பனை நிறுத்தப்பட்டு போராட்டம்
நடைபெற்றது.



இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை விளிம்பு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து இரண்டு நாட்கள் விற்பனை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 19ஆம் தேதி முதல் கட்டமாக போராட்டம் நடந்தது. இரண்டாவது கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 4,570 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும், புதுச்சேரியில் உள்ள 200 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் நேற்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சட்டென்று இருள் சூழ்ந்து காணப்பட்டன. போராட்டம் நடைபெற்ற சமயத்தில் பெட்ரோல் விற்பனை செய்யப்படவில்லை. இதனால், பெட்ரோல் நிரப்புவதற்காக வந்தவர்கள்போராட்டம் முடியும் வரையிலும் காத்திருந்து நிரப்பி சென்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி கூறியதாவது: “விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தம் செய்து நடத்திய போராட்டம் எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்த அடையாள போராட்டம் ஆகும். எங்களின் கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்தி போராட்டம் நடத்துவோம். மேலும் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை நிறுத்துவதற்கும் முடிவெடுத்துள்ளோம். அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். அதேபோல் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவன சின்னங்களின் விளக்குகள் அணைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையை நிறுத்திவிட்டு, விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்