October 18, 2016

2050-ஆம் ஆண்டுக்குள், 70 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் !!!


கடந்த நான்கு ஆண்டுகளில் தினந்தோறும் 550 பேர் வேலையிழந்துள்ளனர்; இதேநிலை நீடித்தால், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், 70 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்''
என்று தில்லியைச் சேர்ந்த "பிரஹார்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.


விவசாயிகள், சிறு வியாபாரிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இதுவரை இல்லாத அளவில் வாழ்வாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 50 சதவீத வேலைவாய்ப்புகளை விவசாயத் துறையும், 40 சதவீத வேலைவாய்ப்புகளை சிறு,குறு,நடுத்தர தொழில்துறையும் அளித்து வருகின்றன. இந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே வேலையிழப்புக்கு முக்கியக் காரணமாகும்.

மேலும், இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறைந்துவருவதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
நாட்டில் அமைப்பு சார் நிறுவனங்கள், 3 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால், அமைப்பு சாரா நிறுவனங்கள், சுமார் 44 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியை முதலீடு செய்வதாக பன்னாட்டு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. ஆனால், அந்த முதலீடுகளால் 60 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க முடியும். எனவே, நாட்டில் 99 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம், அமைப்புசாரா தொழில்கள், சிறு-குறு-நடுத்தர தொழில் துறைகள் ஆகியவற்றை இந்திய அரசு முறைப்படுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்