October 12, 2016

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து


விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட
உள்ளது.பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்