October 11, 2016

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.


அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது
அய்யூப் அறிவித்துள்ளார்.கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவுமுஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.

அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா நபியை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.இந்த மொகரம் பிறையின் பத்தாவதுநாள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் மக்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மொகரம் நாள் வரும் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் இன்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்